குங்கிலியம் மரம் (Sal Tree)

தமிழகத்தில், சேலம் அருகே உள்ள சேர்வராயன் மலைப்பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களிலும், விளையக்கூடிய ஒரு மரம் தான் சாம்பிராணி மரம் எனப்படுகிறது. வட இந்தியாவில், இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் காணப்படும் சாம்பிராணி மரங்கள் இன்று, உலகில் மிகவும் குறைந்துவரும் மரங்களில் ஒன்றாக இருக்கின்றன. சாம்பிராணி மரங்களிலிருந்து இரப்பர் பால் போல வடியும் ஒரு பிசினே, வீடுகளில் நாம் உபயோகிக்கும் சாம்பிராணி. இறை வழிபாடுகளில் மத பாகுபாடு கடந்து அனைத்து மதங்களிலும் சாம்பிராணி புகை இடம் பெறுகிறது.

பழங்காலங்களில், குங்கிலியம் எனும் மரத்தின் பாலே, நம் நாட்டில் சாம்பிராணி போல பயன்படுத்தப்பட்டுவந்தது, குங்கிலிய மரங்கள் இன்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. அந்த மரங்களின் வேர் மண் கூட, வாசனைமிக்கதாக இருக்கும். இந்த குங்கிலியபுகையே, அக்காலங்களில் அரசர்கள், பெரும்செல்வந்தர்கள் இருப்பிடங்களில், வாசனைப்புகையாகவும், கொடிய நச்சுக்களைப் போக்கக்கூடியவையாகவும் பயன்பட்டன.

பழங்கால வழக்கம்

முன்னோர் கூறியவை எல்லாம், சுத்த பட்டிக்காட்டுத்தனம் என்று சொல்லி, இன்று பல்வேறு வழிகளில், இயற்கையை விட்டு விலகி, நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டோம். இயற்கை சாம்பிராணி எதற்கு என்ற மகத்துவம் அறியாமல், அதை விலக்கி, செயற்கையாக கிடைக்கும், சாம்பிராணி வில்லைகளை வாங்கி, நாமும் சாம்பிராணி புகையை வீடுகளில் போடுகிறோம், என்று நம்மை நாமே, ஏமாற்றிக் கொள்கிறோம். தூபக்கால் எனும் சாம்பிராணி காட்டும் பாத்திரத்தில், தேங்காய் ஓடுகளை எரித்து, அதில் நெருப்பை உண்டாக்கி, அதில் சுத்த சாம்பிராணியை பொடியாக்கி தூவ, வீடுகளில், தெய்வீக நறுமணம் உண்டாகும். இந்த சாம்பிராணி புகையை வீடுகளில் உள்ள பூஜையறையில் காட்டி விட்டு, பின்னர், வீடு முழுவதும், வரவேற்பறை, சமையலறை மற்றும் படுக்கையறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், சாம்பிராணி புகையை காட்டி வருவர்.

சாம்பிராணி புகை இடுவதால் ஏற்படும் நன்மைகள். அக்காலங்களில், குழந்தைகள் அனைவரும் வாரமொருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து வந்ததும், தலைக்கு சாம்பிராணி புகை போடுவர், பெண்களும் குளித்து வந்ததும், சாம்பிராணி புகையை சுவாசித்து, தலையிலும் காட்டிக்கொள்வர். ஏன், என்ன காரணம்? முன்னோர் செயலில் எதற்கும் ஒரு விளக்கம் இருக்கும், பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்வதுடன், சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள இராஜ உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல், காத்து வரும். மேலும், தலைக்கு சாம்பிராணி புகையை காட்டி வர, தலை முடி கருமையாக வளர்ந்து, நரைகள் இல்லாமல், ஆண்கள் பெண்கள் அனைவரும் நலமுடன் வாழ்ந்தன.

புற்று நோயை குணப்படுத்தும் இயற்கை சாம்பிராணி

தற்போதைய ஆய்வுகளில், குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள், புற்று வியாதிகளை சரியாக்கக்கூடிய, மருத்துவ தன்மை மிக்கவை என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இதையே தானே, நம் முன்னோர் அன்றே கூறி, எண்ணெய் தேய்த்து குளிக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மற்றும் வீடுகளில் வாரமிருமுறையும் சாம்பிராணி புகைக்கச் சொல்லி, அறிவுறுத்தி வந்தனர்.

நச்சுக்களை அழிக்கும்

சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது, எனவே, வீடுகளில் நாம் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகையிட்டு வர, கிருமிகள் விலகி விடும், வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பாதிப்புகளும் நேராது என்ற எண்ணத்திலேயே, வீடுகளில் சாம்பிராணி புகை இட்டனர்.

சாம்பிராணியின் மருத்துவ பலன்கள்

குங்கிலியத்திலும், சாம்பிராணியிலும் உள்ள வேதி அமிலங்கள், மனிதர் உடல் நலனைக் காக்க, பயனாகின்றன. தீக்காயங்கள் ஆற, குங்கிலியம், ஊமத்தை இலையை வெண்ணையில் அரைத்து தடவி வர, எரிச்சல் தீர்ந்து, காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

எலும்பு முறிவிற்கு

குங்கிலியம் சிறந்த கிருமி நாசினி, உடைந்த எலும்புகளை ஒன்றிணைக்கும் ஆற்றல் மிக்கது. சிறுநீரக பாதிப்புகளை நீக்கி, சிறுநீரை அதிகரிக்கும் தன்மை உள்ளது. குங்கிலிய இலைச்சாற்றை பருகி வர, மூட்டு வலிகள் சரியாகும்.

வீக்கங்கள், கட்டிகள் மறைய

சாம்பிராணியை சிறிய வெங்காயத்துடன் அரைத்து தடவ, கட்டிகள், வீக்கங்கள் குணமாகும்.

கொசுக்களை தடுக்க

மழைக்காலங்களில், வீடுகளில், சாம்பிராணியுடன் வேப்பிலை சருகு, நொச்சி இலை சருகு இவற்றை சேர்த்து, படுக்கை அறைகளில் புகை இட்டு வர, மழைக்கால வியாதிகளைப் பரப்பும் கொசுக்கள் எல்லாம் நொடியில் ஓடி விடும், இரவில் கொசுக்கடி இல்லாத, சுகமான உறக்கத்தை அனுபவிக்கலாம்.

நறுமண திரவியங்கள்

குங்கிலிய மரங்கள் மற்றும் சாம்பிராணி மரப்பிசின்கள் மூலம், நறுமணமூட்டும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆன்டி செப்டிக் எனும் கிருமிநாசினி தயாரிப்பிலும், இந்த மரங்களின் பிசின்கள் சேர்க்கப்படுகின்றன. சாம்பிராணி மரங்கள், மரப் பெட்டிகள், தீக்குச்சி தயாரிப்பில் அதிக அளவில் பயனாகின்றன.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.