சானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)

பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பல்துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்களில் பிளாஸ்டிக் மெட்டிரியல் உள்ளது. இது உராய்வின் போது காயங்களையும், அரிப்பையும் உண்டாக்கும், மேலும் இது பெண் உறுப்பிற்கு செல்லும் காற்றை தடுத்து நிறுத்தி விடும். ரேயான் மெட்டிரியல் மூலம் செய்யப்பட்ட நாப்கின்கள், பெண் உறுப்பின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்று என்ன?

சாட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் ஏற்படும் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் பாரம்பரிய துணி அடிப்படையிலான முறையை ஏற்றுக்கொள்வதில் பெண்களுக்கு பெரும் தயக்கம் காணப்படுகிறது.

துணி நாப்கின்கள்

துணி நாப்கின்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவையாகும். துணி நாப்கின்களை நீங்கள் சுகாதாரமாக பயன்படுத்தினால், பல தடவைகள் பயன்படுத்தலாம். பலமுறை உபயோகப்படுத்துவதால் இது சுத்தமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கு இருப்பது தான். ஆனால் இதனை சுத்தம் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. நீங்கள் இதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, டீ ட்ரீ ஆயில் அல்லது, ஏதேனும் கிருமி நாசினியை கொண்டு சூடான நீரில் சுத்தம் செய்தாலே போதும். இதில் கசிவுகளும் இருக்காது.
இது உங்களுக்கு தேவையான வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே இவற்றை கண்டு நீங்கள் முகம் சுழிக்கமாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.

வாழை இலையில் தயாராகும் சானிடரி நாப்கின்

வாழை இலை சானிடரி நாப்கின் எப்படி தயாரிக்கப்படுகின்றது என்பதை பார்ப்போம். வாழை மரத்தின் தண்டை எஸ்ட்டிராக்டர் மெஷினில் விட்டு நிறைய ஸ்ட்ரிப்புகளாக உருவாக்குகிறார்கள். பின்பு அதில் பேக்கிங் சோடா உபயோகப்படுத்தி சுத்தம் செய்யப்படுகின்றது. இவை சூர்ய வெளிச்சத்தில் 5 நாட்கள் காயவைக்கப்படுகின்றது. பின்பு இவை தைக்கப்பட்டு நாப்கின்களாக உருப்பெறுகின்றன. இவை அதிகஅளவு உறிஞ்சும் தன்மை கொண்டதால் வேலை செய்யும் பெண்கள் 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின்

பிளாஸ்டிக் அறவே இல்லாமல் இயற்கையான முறையில் மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை உருவாக்கி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.எச்டி மாணவி ப்ரீத்தி ராமதாஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த நாப்கின்கள் ஒரு மாதத்துக்குள்ளாக மட்கும் தன்மை கொண்டவை. இந்த நாப்கின்கள் செல்லுலோஸை அடிப்படையாகக் கொண்டவை. இது மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பெண்களுக்கு பாக்டீரியா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் இது செயலாற்றுகிறது.

மிகவும் மெலிதாக இருக்கும் இந்த நாப்கின், 3 மி.மீ. தடிமன் கொண்டது. தன்னுடைய எடையைக் காட்டிலும் 1,700% அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. தாவரங்களின் மூலம் கிடைக்கும் பாலிமர்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வழக்கமாகக் கடைகளில் கிடைக்கும் நாப்கின்களிலும் டயாப்பர்களிலும் பிளாஸ்டிக் இருக்கும். இதனால் அவை மட்க அதிக காலம் பிடிக்கும். காகித எச்சத்தில் இருந்து உருவாக்கப்படும் செல்லுலோஸ் கூழ் அதில் இருக்கும். அத்துடன் அவற்றை வெள்ளையாக்க குளோரின் பயன்படுத்தப்படும். அவை நச்சுகளை வெளியிடுபவை.

மேலும் வழக்கமான நாப்கின்கள், பிளாஸ்டிக் மூலம் கிடைக்கும் பாலிபுரொப்பிலைனால் உருவான ஹைட்ரோபோபிக் தாளால் சுற்றப்பட்டிருக்கும். அதன்மூலம் உடல் அரிப்புகள் ஏற்படும்.

எப்போதுமே இயற்கையின் மீது எனக்கு அலாதியான ஆர்வம் உண்டு. பி.எச்டி குறித்து யோசிக்கும்போது நாம் உருவாக்கும் செயல்திட்டம், பெண்களுக்குப் பயன்பட வேண்டும். அது இயற்கையைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் விளைவுதான் இந்த இயற்கை நாப்கின்.

இது சிப்பெட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களிலும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது” என்கிறார் ப்ரீத்தி ராமதாஸ்.

About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.