ஆவாரை (Senna auriculata)

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்றொரு பழமொழி உண்டு. பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம். மேலும் அந்தப் பூவை அப்படியே உண்ணலாம்.

 மருத்துவப் பயன்கள்

தலைமுடி பிரச்சினைகளுக்கு

 • கருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு இணையே இல்லை. உங்கள் கூந்தலும் அப்படி மாறுவதற்கு… பிடியுங்கள் ஐடியாவை!
 • ஆவாரம் பூ-100 கிராம், வெந்தயம்-100 கிராம், பயத்தம்பருப்பு – அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர.. கருகருவென கூந்தல் கண் சிமிட்டும்.
 • கொத்துக் கொத்தாக முடி கொட்டுகிறதே என்று கவலையா..? அதற்கும் இருக்கிறது ஆவாரம் பூ வைத்தியம்! ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.
 • ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் விட்டுக் கொள்ளுங்கள். உடம்பு பொன்நிறமாவதுடன், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
 • சிலருக்குப் பரம்பரையாக வழுக்கை வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள், தலையில் முடி கொட்ட ஆரம்பித்ததுமே.. 100 கிராம் ஃபிரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்குங்கள். இதை அடுப்பில் வைத்து நீர் பதம் போகும் வரை காய்ச்சுங்கள். இதனுடன் கால் கிலோ தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். இதை முன் நெற்றியில் தினமும் நன்றாகத் தடவி வந்தால், முடி உதிர்வது ஒரே மாதத்தில் நிற்பதோடு, வழுக்கை ஏற்படாமலும் தடுக்கும்.
 • நெற்றியில் வரி, சுருக்கங்கள், தலைக்கு டை அடிப்பதால் ஏற்படும் கருமை திட்டுக்கள் இவையெல்லாம் அழகைக் கெடுத்துவிடும். இதற்கு 100 கிராம் ஃப்ரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்கி, ஓசை வரும் வரை காய்ச்சி, 100 கிராம் பாதாம் ஆயிலைக் கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை கருமை படர்ந்த இடங்களில் குளிப்பதற்கு முன்பு தடவி வர , ஓரிரு வாரத்தில் கருமை காணாமல் போய் வரி, சுருக்கம் ஆகியவையும் மறைந்துவிடும்.

பனிக்காலத்தில் ஏற்படும் வறட்சிக்கு

முகம், கைகளில் பனிக்காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக உண்டாகும் மங்கு,தேமல் போன்றவற்றை போக்கி அழகைக் கூட்டுகிறது ஆவாரம் பூ.
ஃபிரெஷ் ஆவாரம் பூ – 100 கிராம், வெள்ளரி விதை – 50 கிராம், கசகசா – 50 கிராம் இந்த மூன்றையும் அரைத்துக் கொள்ளுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு பால் சேர்த்து, மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் வாரம் இருமுறை பேக் போடுங்கள். காய்ந்ததும் கழுவினால் ஒரே மாதத்தில் அத்தனையும் மறைந்து, உடலின் ஒரிஜினல் நிறம் பளபளக்கும்.

தேவையில்லாத முடி உதிர

உடம்பில் தேவையில்லாத இடங்களில் முடி வளரும்போது, கருப்பான தோற்றம் ஏற்படும். இதற்கு லேசர் ட்ரீட்மென்ட் செய்து கொள்ளும்போது தோல் தடித்து மேலும் கருப்பாகிவிடும். இத்தகைய பிரச்னைக்கும் வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கு-250 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ – 100 கிராம், பூலான்கிழங்கு – 100 கிராம் ஆகியவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்தப் பவுடரை தேய்த்துக் குளிக்கும்போது தேவையில்லாத முடி உதிர்ந்து சருமம் பளிச்சென மின்னும்.

கண் நோயை விரட்ட

ஆரம்பக்கட்ட சர்க்கரை நோயில், இந்த மலர் தரும் மருத்துவத்தினால், பலர் பயனடைவதை ஆரம்பக்கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ”ஆவாரை கொன்றை நாவல் கடலழிஞ்சில் கோரை கோஷ்டம் மேவிய மருத்த் தோல்,”- என ஏழு தாவரங்களைக் கொண்டு டீ போட்டு குடித்தால், ”காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும்” என பரிபாஷையில் சித்தன் சொன்ன சூத்திரத்தை கட்டவிழ்த்துப் பார்த்த விஞ்ஞானிகள், இனிப்பு நீரான(காவிரி நீர்) சர்க்கரை வியாதிக்கும், உப்பு நீரான(கடல் நீர்) சிறுநீரகக் கோளாறில் புரதம் கழிந்து வரும் நீருக்கும், இந்த ஆவாரை காபி ஒரு அரு மருந்து எனபதைக் கண்டறிந்துள்ளது.

அனைத்து நோய்களுக்கும் ௐரே தீர்வு

 • ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
 • ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
 • ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பு தேஜஸ் கூடும்.
 • தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.
 • ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்.
 • ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
 • வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது.
 • ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
 • ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.