எளிய மருத்துவ குறிப்புகள்(Simple Medicinal Tips)

சளி

சளி, காய்ச்சல் போன்ற அனைத்தும் நம் உடலில் உள்ள தேவையற்ற குப்பைகளை விரட்ட உதவும் சிகிச்சை ஆகும். அவற்றை விரட்ட சில குறிப்புகளை காணலாம்.

 • நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
 • கற்பூரவள்ளி (3 அல்லது 4)இலையின் சாற்றை சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளின் இருமல் நீங்கும்.
 • தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
 • சுக்கு, மிளகு, திப்பிலி, கற்பூரவள்ளி ஆகியவற்றை அரைத்து நிழலில் உளர்த்தி சிறு சிறு மாத்திரைகளாக தட்டி ௐரு டப்பாவில் அடைத்து வைத்து கொள்ள வேணடும். சளி பிடிக்கும் போது ரு மாத்திரையை வெது வெதுப்பான நீரில் கலந்து பருக சளி செரியாதும்.
 • நாம கட்டியை அறைத்து தொண்டையில் தடவ வரட்டு இரும்மல் நீங்கும்.

தலைவலி

தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

வாய் நாற்றம்

வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

நமது உடலில் நீர் பற்றாக்குரையே உதட்டு வெடிப்புக்கு முக்கிய காரனமாகும். எனவே தேவையான அளவு தண்ணீர் பருகி உடலை ஆரோகியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை போக்க சில தகவல்கள்,

 • வெண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவினால், வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் வெடிப்புகள் இருந்தால் அவை சரியாகிவிடும்.
 • ஆமணக்கெண்ணெயை உதட்டில் தடவி வந்தால், வறட்சி நீங்கி, உதடு பொலிவோடு காணப்படும்.
 • கற்றாழையின் ஜெல்லை உதட்டில் தடவினால், உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது குணமாகும்.
 • ரோஜாவின் இதழ்களை பச்சை பாலில் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை பேஸ்ட் செய்து, உதட்டில் தடவி வந்தால், உதடு நன்கு பிங்க் நிறத்தில் இருப்பதோடு, வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.
 • வேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்து, அதனை உதட்டில் தடவினால், உதட்டில் இருக்கும் வெடிப்புகள் போய்விடும்.
 • உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

அசாதாரணமான நேரங்களில் செரிமானப் பாதையில் உண்டாகும் குறைபாடுகளால் அல்லது நோய்களால் இந்தச் செரிமான நீர்கள் சரியாகச் சுரப்பதில்லை. அப்போது செரிமானம் தடைபடும். இதையே ‘அஜீரணம்‘ என்கிறோம்.

 • இஞ்சிச்சாறு கொதிக்க வைத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் உணவுக்குப் பின்னர் குடித்தால் பெருத்த வயிறு குறையும்.
 • சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை கஷாயம் வைத்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
 • இஞ்சி சாற்றில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
 • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

 • குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
 • வயிற்று புண் ஆற சுண்டை வற்றலை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் .குடல் புண் ஆறி வலி குறையும்.
 • மாதுளை பழத்தோலை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை மாதுளைப் பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் ஆறும்.
 • கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் ஆறும்.
 • மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் ஆறும்.
 • வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
 • மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.