நாட்டுகோழி வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள் (Nattu Koli Valarpu)

கோழிகளை எப்பொழுதும் கூண்டில் வைத்து வளர்க்க கூடாது. அவ்வாறு வளர்ப்பதால் அவ்வற்றின் மகிழ்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். கோழிகளை எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழலில் வைத்து வளர்க்க வேண்டும். பொதுவாக கோழிகள் செடிகளை உண்டு வாழும்.

கோழிகளுக்கு பசுந்தீவனம்  – 40 %, அடர்தீவனம் – 60 % தேவை.

சணப்பு, வேலிமசால், கோ -1 புல் ஆகிய பசுந்தீவனத்தில் நுன்னூட்டச்சத்துக்கள் கிடைக்கும். ராகி, கம்பு, மக்காசோளம் போன்றவற்றை அடர்தீவனமாக கொடுக்கலாம்.

கோழிகள் பல வகைகள் உண்டு. அவற்றில் கிராமபிரியா வகையை சார்ந்த நாட்டு கோழி அதிக முட்டையிடும் தன்மை வாய்ந்தது. இது வருடத்திற்கு சுமார் 200 முட்டை வரை கொடுக்கும். இந்த வகை கோழிகள் வணிக ரீதியாக கோழி வளர்ப்பவர்களுக்கு மிகவும் சிறந்ததது. இதன் முட்டை மிகவும் சுவையாகவும், பெரியதாகவும் இருக்கும்.

கோழிகளை அடைகாக்கும் போது வைக்க வேண்டிய மூன்று பொருட்கள்

நாட்டுகோழி

 • காய்ந்த மிளகாய்
 • கரித்துண்டு
 • இரும்பு

காய்ந்த மிளகாய் – கோழி பேன் உருவாகாமல் தடுக்கும்

கரித்துண்டு – மழைக்காலத்தில் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்

இரும்பு – மழைக்காலத்தில் இடியிலுருந்து பாதுகாத்து முட்டைகளை நல்ல முறையில் குஞ்சுகளாக மாற உதவும்.

கோழிகுஞ்சுகளுக்கு மிகவும் சத்தான முருங்கை இலை கசாயம்

முருங்கை இலை கசாயம் செய்து வாரம் இரண்டு முறை குஞ்சுகளுக்கு கொடுத்து வர அவற்றிக்கு அணைத்து சத்துக்களும் கிடைக்கும்.

முருங்கை சூப் செய்முறை

ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி முருங்கை இலை சேர்த்து கொதிக்க வைத்து வடி கட்டி காலை வேளையில் குஞ்சுகளுக்கு கொடுக்கலாம்.

முருங்கை இலையில் உள்ள சத்துக்கள்

 • கலோரி – 92%
 • புரதம் – 6.7%
 • தாது பொருள் – 2.3%
 • கார்போஹைட்ரெட் – 12%
 • கால்சியம் – 443mg
 • பாஸ்பரஸ் – 70mg
 • வைட்டமின் சி – 120mg
 • வைட்டமின் பி காம்ப்லெக்ஸ்

குஞ்சுகளின் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த வழிகள்

குஞ்சுகள் பிறந்த இருபது நாட்களுக்கு அவற்றிக்கு தேவையான வெப்பத்தை ஏற்படுத்தி தர வேண்டும். அவற்றிக்கு தேவையான சத்துமிக்க உணவை அளிக்க வேண்டும்.

குஞ்சுகளுக்கு தேவையான சத்துக்கள்

நாட்டுகோழி

 • எரிசத்து
 • புரதசத்து
 • நார்சத்து

எரிசத்து – அணைத்து தானிய வகைகளிலும் இருக்கும் சத்து ஆகும். அரிசி, மக்காசோளம், கம்பு போன்ற தானியங்களில் இருக்கும்.

புரதசத்து – உடல் ஆரோக்கியத்துடனும், உடல் எடை அதிகரிக்கவும் உதவும். புண்ணாக்கு வகைகளில் அதிகம் கிடைக்கும். இச்சத்து பானைக்கரையான், அசோலா, கீரை வகைகள், பசுந்தீவனம் ஆகியவற்றிலும் காணப்படும்.

நார்சத்து – செரிமானத்தை அதிகரிக்க உதவும். தவிடு வகைகளில் காணப்படும்.

நாட்டு கோழிகளை தாக்கும் நோய்கள்

பொதுவாக நட்டு கோழிகளை தாக்கும் நோய்கள் மூன்று. அவைகள்

 • வெள்ளை கழிச்சல் நோய்
 • கோழி அம்மை நோய்
 • குடல் புண்கள்

வெள்ளை கழிச்சல் நோய்க்கான மருந்து

 • சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து கோழிகளுக்கு கொடுக்க அவற்றிக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த கலவையை வாரம் ஒரு முறை கோழிகளுக்கு கொடுக்க வேண்டும்.
 • கீழாநெல்லி வேரை நன்றாக கழுவி கொள்ள வேண்டும். அதனுடன் சீரகம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகு சேர்த்து அரைத்து உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். நோய் தீவிரமாக இருக்கும் கோழிகளுக்கு இந்த கலவையை காலை 2 உருண்டை, மதியம் 2 உருண்டை, மாலை 2 உருண்டைகள் கொடுக்க வேண்டும். பிற கோழிகளுக்கு இந்த கலவையை மக்காசோளம் அல்லது வேற தானியங்களுடன் சேர்த்து கொடுக்கலாம்.

கோழி அம்மை மற்றும் குடல் புண்களுக்குக்கான மருந்து

 • குப்பைமேனி இலை
 • கீழாநெல்லி இலை
 • வேப்பிலை
 • கொய்யா இலை (குடல் புண்களை ஆற்ற, கழிவுகளை வெளியேற்ற)
 • கோவத்தலை (குடல் கிருமிகளை வெளியேற்ற)
 • மஞ்சள் தூள்
 • சீரகம்
 • மிளகு
 • வெந்தயம்

இவை அனைத்தையும் 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சுண்ட காய்ச்சி கஷாயம் ஆனதும் அவற்றை 10 லிட்டர் நீரில் கலந்து காலை மாலை என இரண்டு வேளைகளும் கோழிகளுக்கு கொடுக்க வேண்டும். இவற்றை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை கோழிகளுக்கு கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

நோய் இல்லாமல் வளர மற்றும் எடை அதிகரிக்க சில குறிப்புக்கள்

நாட்டுகோழி

 • பனங்கருப்பட்டி அல்லது தென்னங்கறுபட்டி சீவி வெது வெதுப்பான நீரில் கலந்து கோழிகளுக்கு கொடுக்க வேண்டும்.
 • துளசி இலைகளை நீரில் ஊறவைத்து கொடுக்கலாம்.
 • வேப்பிலையை மஞ்சள் சேர்த்து அரைத்து நீரில் கலந்து கொடுக்கலாம்.
 • வாத நாராயணன் இலையை கொடுக்கலாம். இது உடலில் கழிவு சேராமல் தடுக்கும். இதனால் நோய் வராமல் பாதுகாக்கலாம்.

கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

 • வில்வ இலைகளை அரைத்து நீரில் கலந்து குஞ்சுகளுக்கு கொடுக்கலாம். இது குடல் புண்களை ஆற்றும் சக்தி கொண்டது. இது வெள்ளை கழிச்சல் மற்றும் இரத்த கழிச்சல் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
 • குப்பைமேனி இலைகளை மஞ்சள் சேர்த்து அரைத்து அதனுடன் வேப்பெண்ணை கலந்து மேல் பூச்சாக கொடுப்பதால் அம்மை, ஒட்டுன்னி போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும். வாயில் பூஞ்சை தாக்குதல் இருந்தால் வாயின் உள்ளேயும் கொடுக்கலாம்.
 • அசோலாவை நீரில் அலசி காயவைத்து கொடுப்பதால் அதற்கு தேவையான புரத சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
 • முட்டைகோஸ், சௌசௌ, தக்காளி, சுரைக்காய் போன்றவற்றை வாரம் ஒரு முறை கோழிகளுக்கு நறுக்கி போடலாம்.
 • பனிக்காலத்தில் கோழிகளுக்கு நெல் உமி படுக்கை போடலாம். இது கோழிகளுக்கு தேவையான கதகதப்பை ஏற்படுத்தி தரும்.
 • பஞ்சகவ்யா மற்றும் அசோலாவை சீரான இடைவெளியில் கொடுப்பதால் தடுப்பூசி போடாமலேயே கோழிகளை வளர்க்கலாம்.

கோடைகால கோழி பராமரிப்பு

 • சின்ன வெங்காயம், தயிர். பூண்டு, சேர்த்து கொடுக்க இது வெயில்லிருந்து கோழிகளை பாதுகாக்கும்.
 • பஞ்சகவ்யம், கஷாயம் மற்றும், சின்ன வெங்காய கலவையை வாரத்தில் இரண்டு நாட்கள் இடைவெளியில் கொடுக்கலாம்.

பேன் தொல்லை நீங்க

 • பீநாறி சங்கு இலையை கோழி இருக்கும் கூண்டில் போடலாம். பேன் அதிகமாக இருந்தால் இந்த இலையை அரைத்து பூசலாம்.
 • சீதாப்பழ இலையை அல்லது சீத்தாப்பழத்தை அரைத்து பூச பேன் தொல்லை நீங்கும்.
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.