முருங்கையில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் (Technology to grow Plant Drumstick)

இரகங்கள் : பிகேஎம் 1. கேஎம் 1, பிகேஎம் 2

மண் மற்றும் தட்பவெப்பநிலை

செடி முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரும். இருப்பினும் மணல் கலந்த செம்மண் பூமி அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது, மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

பருவம் : ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர்

விதையளவு : எக்டருக்கு 500 கிராம் விதைகள்

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது சமன் செய்த பின்பு 2.5 மீ  x 2.5 மீ இடைவெளியில் 45  x 45 x 45 செ.மீ நீளம். அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும். தோண்டிய குழிகளை ஒரு வாரம் ஆறப்போட்டு விட்டு, பிறகு குழி ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 கிலோ வாரம் ஆறப்போட்டு விட்டு, பிறகு குழி ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 கிலோ மற்றும் மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்பவேண்டும். குழிகளைச் சுற்றி சுமார் 60 செ.மீ அகலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கேற்ற வாய்க்கால்கள் அமைக்கவேண்டும்.

விதையும் விதைப்பும்

மூடப்பட்ட குழிகளின் மத்தியில் சுமார் 3 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைக்கவேண்டும். ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்கவேண்டும். விதைத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் விதைகள் முளைக்கும். விதைகளை பாலித்தீன் பைகளில் விதைத்து 30 நாட்கள் வயதுடைய செடிகளை நடுவதற்கு பயன்படுத்தலாம். விதைகள் முளைக்காத குழிகளில் பாலித்தீன் பைகளில் வளர்ந்த செடிகளை நட்டு செடி எண்ணிக்கையைப் பராமரிக்கலாம்.

நீர் நிர்வாகம்

விதைப்பதற்கு முன் மூடிய குழிகளில் நீர் ஊற்றவேண்டும். விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

முருங்கையில் நல்ல விளைச்சல் பெற செடி ஒன்றுக்கு 45 கிராம் தழைச்சத்து 16 கிராம் மணிச்சத்து, 30 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்சவேண்டும். மேலும் ஆறாவது மாதத்தில் தழைச்சத்து மட்டும் ஒரு செடிக்கு 45 கிராம் என்ற அளவில் இடவேண்டும்.

தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது, ஒன்றரை மாதங்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். 6-ம் மாதத்தில் மண் அணைக்க வேண்டும். 45-ம் நாளில் ஒரு செடிக்கு ஒரு கிலோ மண்புழு உரத்துடன் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கும்; 90-ம் நாளில் ஒரு செடிக்கு ஒரு கிலோ மண்புழு உரத்துடன் 200 கிராம் வேப்பம் பிண்ணாக்கும்; 130-ம் நாளில் ஒரு கிலோ மண்புழு உரத்துடன் 400 கிராம் வேப்பம் பிண்ணாக்கும் கலந்து வைக்க வேண்டும். 30-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் தென்பட்டால், டேங்குக்கு 1 லிட்டர் வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம். 50 லிட்டர் அமுதக்கரைசல், 50 லிட்டர் ஜீவாமிர்தக்கரைசல் ஆகியவற்றை மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களையெடுத்தல் : விதைத்து இரண்டு மாதங்கள் வரை நிலத்தை களையின்றி பராமரிக்கவேண்டும். செடிகள் மூன்றடி உயரம் வளர்ந்த பிறகு மாதம் ஒரு முறை அல்லது தேவைப்படும் போது களையெடுக்கவேண்டும்.

நுனிகிள்ளுதல் : செடிகள் சுமார் 1 மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் நுனியைக் கிள்ளிவடவேண்டும். இவ்வாறு செய்வதனால் பக்கக் கிளைகள் அதிகமாகத் தோன்றும்.

3 முதல் 4 மாதங்களில் மூன்று அடி உயரம்; 4 முதல் 5 மாதங்களில் ஐந்து அடி உயரம்; 5 முதல் 6 மாதங்களில் ஏழு அடி உயரம் என வளர்ந்து வரும். இந்தக் காலகட்டங்களில் முருங்கைச் செடிகளில் உள்ள ‘கொழுந்து’ பகுதியைக் கிள்ளிவிட வேண்டும். அதற்குமேல், அதிக சிம்புகள் விட்டு வளர ஆரம்பித்துவிடுவதால், கொழுந்து கிள்ளத் தேவையில்லை. 4-ம் மாதத்தில் பூ எடுக்க ஆரம்பித்து, 5-ம் மாதத்தில் இருந்து பிஞ்சுகளாக மாறி, 6-ம் மாதத்தில் காய்கள் அறுவடைக்குத் தயாராகும். அதிலிருந்து, சுமார் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து, 200 முதல் 300 காய்கள் கிடைக்கும். ஒவ்வொரு காயும், ஒன்றரை முதல் மூன்று அடி நீளம் கொண்டதாக இருக்கும்”

ஊடுபயிர்: தனிப்பயிராக முருங்கை சாகுபடி செய்யும் பொழுது ஊடுபயிராக தக்காளி, வெண்டை, தட்டைப்பயிறு போன்ற குறுகிய காலப் பயிர்களைப் பயிர் செய்யலாம். பழத்தோட்டம் மற்றும் தென்னந்தோப்புகளில் முருங்கையை ஊடுபயிராகப் பயிரிடும் பொழுது மரங்களின் இடைவெளியை அனுசரித்து குழிகள் எடுத்து வைக்கவேண்டும்.

மறுதாம்புப் பயிர் : ஒரு வருடம் கழித்து காய்ப்பு முடிந்த பிறகு செடிகளை தரைமட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் வெட்டிவிடவேண்டும். இதனால் புதிய குருத்துக்கள் வளர்ந்து மீண்டும் 4 முதல் 5 மாதங்களில் காய்க்கத் தொடங்கும். இதுபோல ஒவ்வொரு காய்ப்புக்குப் பிறகும் செடியை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்புப் பயிராக பராமரிக்கலாம். ஒவ்வொரு முறை கவாத்து செய்த பிறகு பரிந்துரை செய்யப்பட்டுள்ள தழை, மணி, சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.

அறுவடை

விதைத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.

மகசூல் : ஓர் ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் 220 காய்கள் வரை அறுவடை செய்யலாம். ஆண்டொன்றிக்கு ஒரு எக்டருக்கு 50-55 டன் வரை காய்கள் கிடைக்கும்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.