திரிபலா சூரனம் செய்முறையும் அதன் பயன்களும் (Tiripala Sornam)

திரிபலா பொடி

நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த ஒரு பாரம்பர்ய மருந்து திரிபலா. அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

செய்முறை

திரிபலா சூரனம்

கடுக்காய்த்தோல் – 100கிராம்
நெல்லிவற்றல் – 100கிராம்
தான்றிக்காய்த்தோல் – 100கிராம்

மூன்றையும் தனித்தனியாகப் பொடித்து சலித்து,சம அளவு கலந்து கொண்டால், திரிபலா சூரணம் தயார்!

அளவு: ஒன்று முதல் மூன்று கிராம் வரை

 திரிபலா தரும் நன்மைகள்

 • வறட்டு இருமலினால் அவதியுறுவோர்,ஒரு கிராம் அளவு திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து குடிக்க நல்ல குணம் கிடைக்கும்.
 • வயிற்றுவலி,நெஞ்செரிச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒரு கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நலம் பெறலாம்.
 • மலச்சிக்கலுக்கு இரண்டு கிராம் சூரணத்தை,வெந்நீருடன் கலந்து இரவு தூங்கும் முன் பருகி நிவாரணம் பெறலாம்.
 • மலம் கழிக்கையில் இரத்தம் வருதல்,பெண்களுக்கு ஏற்படும் அதிஇரத்தப்போக்கு,பௌத்திர நோயில் காணும் சலம் இவற்றிற்கு,1-2 கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து காலை-மாலை உண்ண நோய் நீங்கி நலம் பெறலாம்.
 • ஆரம்ப நிலை சர்க்கரை நோயர்கள்,பரம்பரையில் சர்க்கரை நோயுள்ளவர்கள், மூன்று கிராம் அளவு சூரணத்தை வெந்நீருடன் கலந்து காலை,மாலை பயன்படுத்தினால் சர்க்கரை நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
 • உடற்பருமனை குறைக்க விரும்புபவர்கள்,காலை மாலை உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சூரணத்தை சுடுநீருடன் கலந்து பருகலாம்.
 • 50 வயதுக்கு மேற்பட்டோர்,நோய் வராது தடுக்கும் காயகற்ப மருந்தாக திரிபலா சூரணத்தை மாலையில் உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சுடுநீருடன் கலந்து பருகலாம்.
 • முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
 • இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
 • திரிபலா சூரனம்
 • உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
 • வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.
 • ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
 • கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
 • உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.
 • ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.
 • மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.
 • உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.
 • பற்பொடியாக பயன்படுத்த,பற்கூச்சம்,பல்வலி,ஈறுவீக்கம் குணமாகும்.

எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?

 •  மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
 • குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.
 •  பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.
 •  கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.