நாக்கைப் பற்றி நாம் அறியாத  விஷயம்(Unknown Facts about Tongue)

நம் எண்ணத்தில் உதிக்கும் சிந்தனைகளை மற்றவர்களிடம் பறிமாறிக் கொள்ளவும், நாம் உண்ணும் உணவை பற்கள் அரைக்கத் தக்கவாறு சமநிலைப் படுத்தவும் உதவும் ஓர் முக்கிய உறுப்பு  நாக்கு.  இது, பொதுவாக நாம்  அறிந்த  விஷயம்தான். ஆனால், நாக்கைப் பற்றி நாம் அறியாத  விஷயம் ஒன்றும் இருக்கிறது.

நாக்கு, நம் உடம்பின் தன்மையை அப்படியே  வெளிக்காட்டும் கண்ணாடி. நாக்கின் தன்மையை வைத்தே உடம்பில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும்.

அதனால்தான், எந்தப் பிரச்னை என்றாலும் மருத்துவர்கள் முதலில் நாக்கைக் காண்பியுங்கள் என்று டார்ச் அடித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்த உடனே,  நம் உடலுக்கு என்ன பாதிப்பு என்பதை ஓரளவுக்கு அனுமானித்து விடுவார்கள். பொதுவாக நம் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். அப்படித்தான் இருக்கவும் வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நம் உடலில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

நாக்கின் தன்மையை வைத்து எந்த நோயையெல்லாம் கண்டுபிடிக்கலாம் என்று  பொது மருத்துவர் பாஸ்கர் விளக்குகிறார்.

“நாக்கு, சகல உறுப்புகளோடும் தொடர்புடைய ஓர் உறுப்பு. அது வைட்டமின் பாதிப்புகள், தொற்றுப் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு – இந்த நான்கையும் காட்டிக்  கொடுத்துவிடும். நாக்கின் நிறம் மட்டுமன்றி அதன் வடிவமும் மேல், கீழ் பகுதிகளும் நோய் பாதிப்பை காட்டும். நாக்கை மடித்துக்காட்டச் சொல்லி மருத்துவர்கள் கேட்பது அதற்காகத் தான்.

  • நாக்கு, வெள்ளை நிறத்தில் இருந்தால் வாயில் தொற்றுப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.
  • சிவப்பு நிறமென்றால் வைட்டமின் பாதிப்பு, மஞ்சள் நிறமென்றால் நீர்ச்சத்துக் குறைபாடு, நாக்கின் நுணி மட்டும் சிவந்திருந்தால் மனஅழுத்தம், நாக்கின் பின்புறம் சிவப்பு நிறமாகும் பட்சத்தில் சுவாசக் கோளாறுகள் இருப்பது உறுதியாகும்.
  • நாக்கு வீங்கியிருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு.
  • நாக்கில் வலி எடுத்தால் சர்க்கரை நோய். நாக்கின் இடது மற்றும் வலது பக்கங்களில் பாதிப்பு இருந்தால் கல்லீரல் பாதிப்பு.
  • நாக்கின் மேற்பரப்பு வறண்டு இருந்தால், ரத்தச்சோகை, அடர்சிவப்பு என்றால் உடல் உஷ்ணம், கறுப்பு நிற புள்ளிகள் இருந்தால் ரத்த ஓட்டத்தில் கோளாறு.

நாக்கு பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

நாக்கைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். காலையில் பல் துலக்கும்போது, பலரும் நாக்கை சுத்தப்படுத்த தவறுவார்கள். நாக்கைக் கவனிக்காமல் விடுவது, வாய் மற்றும் பல் தொடர்பான பிரச்னைகளை உருவாக்கும். அது மட்டுமல்ல நாம் சாப்பிடும் உணவு செரிக்க நாவில் சுரக்கும் எச்சில் மிக மிக அவசியம். செரிமானத்தின் துவக்கமே அதுதான் என்று கூட சொல்லலாம்.

எனவே, தினமும் பல் துலக்கும் போது, நாக்கின் மேல்புறத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.  அதற்காக, டங் கிளீனரைக் கொண்டு அழுத்தித் தேய்க்கக் கூடாது. அப்படிச் செய்தால் வீக்கம், வலி உண்டாக வாய்ப்புண்டு. எனவே, மிகவும் கவனமாக சுத்தப் படுத்தவேண்டும்.

அதுபோல, மிதமான சூட்டில் உப்புச் சேர்த்து வாய் கொப்பளிப்பது மிகவும்  நல்லது. சாப்பாட்டுக்குப் பிறகு வாய்க்கொப்பளிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அனுதினமும்,  நாவைப் பாதுகாத்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.