வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம்(Terrace Gardening)

பூச்சி மருந்து தெளிக்காத காய்கரிகளை பெருவது மிகவும் அரிதாகிவிட்டது. அதன் காரனமாக நாம் பல்வேரு நோய்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. இதற்கு ௐரு நிரந்தர தீர்வாக வந்துவிட்டது வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம்.

வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே நம்க்கு தேவையான காய்கரிகளை விளைவித்துக் கொள்ள முடியும்.

வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம்

வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம் அமைக்க தேவையானவை

 • தரமான விதைகள்
 • வளர் ஊடகம் (growing media)
 • வளர்க்கும் பைகள்(grow bags)
 • வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள தண்ணீர் தேங்காத இடம்

மண்கலவை

 • 2 பங்கு செம்மண் (அல்லது) வளமான மண்
 • ஒரு பங்கு மண்புழு உரம்
 • ஒரு பங்கு தேங்காய் நார் கழிவு
 • 10 கிராம் சூடோமொனாஸ்/ டிரைகோடர்மாவிரிடி/ பாஸ்போபாக்டீரியா/வேப்பம் புண்ணாக்கு
 • பின்பு பைகளின் அடிப்பகுதி நனையும் வரை நீர் ஊற்ற வேண்டும்.

விதை நேர்த்தி

 • தரமான விதைகளை சூடோமொனாஸ் (உயிர் உரம்) லேசாக தூவி அல்லது பஞ்சகவ்யா கலந்த நீரில் ஊற வைத்து நடும்பொழுது நோய் தாக்குதல் இல்லாமல் விதைகள் செழிப்பாக முளைக்கும்.
 • கீரை போன்ற சிறிய விதைகளை வேப்பம் புண்ணாக்கு கலந்து தூவ வேண்டும்.
 • பெரிய விதைகளை (கொடி வகைகள்) 24 மணி நேரம் ஊற வைத்து, பின்பு நட வேண்டும்.

நடவு முறை

பைகளில் விதைகளை அதன் அளவு போல் ஐந்து மடங்கு ஆழத்தில் அதாவது 1 இன்ச் அல்லது 2 இன்ச் ஆழத்தில் நட வேண்டும். பெரிய விதைகளை (கொடி வகைகள்) படுக்கை வசத்தில் நட வேண்டும்.

நீர் ஊற்றும் முறை

 • விதைகள் முளைக்கும் வரை பூவாளி அல்லது துளையிடப்பட்ட மூடியால் ஆன தண்ணீர் பாட்டிலிலும் நீர் ஊற்றலாம்.
 • செடிகளின் தன்மைக்கு ஏற்ப தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் ஊற்ற வேண்டும்.
 • காலை 8 மணிக்கு முன்பும் மாலை 5 மணிக்கு பின்பும் மட்டுமே நீர் ஊற்ற வேண்டும்.

கொடி வகை செடிகள்

 • செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க குச்சிகளை நடலாம்.
 • கொடி வகை செடிகளை நுனியில் நூல்கட்டி பந்தல் அமைத்து ஏற்றி விட வேண்டும்.
 • 15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம்/ தொழு உரம்/ மக்கு உரம்/ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றையும், பஞ்சகவ்யாவை இலைகளின் மேல் தெளித்தும் செடிக்கு தொடர்ந்து ஊட்டம் கொடுப்பது மிக மிக அவசியம்.

பூச்சி தாக்குதல்

 • பூச்சி, நோய் தாக்குதலை தடுக்க வேப்ப எண்ணெய் 5 ml அதனோடு புங்க எண்ணெய் 5ml மற்றும் காதி சோப் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.
 • பூச்சி தாக்குதலை தடுக்க மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை அல்லது எண்ணெய் தடவிய மஞ்சள் காகிதத்தை தோட்டத்தின் நடுவில் தொங்க விட வேண்டும்.

இந்த வீட்டுத்தோட்டம் தொடங்க அதிக பணம் செலவாகும் என்று பயப்பட வேண்டாம், நம்மிடம் ஆர்வம் இருந்தால் போதும், நம்மிடம் உள்ள பணத்தை வைத்து மிக எளிமையாக, அதற்கேற்ப பண்ணலாம். இதன் மூலம் நகர் புற மக்களும் விவசாயம் செய்ய முடியும். மேலும் இரசாயனமின்றி சத்தான உணவை நம் கைகளில் நாமே உற்பத்தி செய்து பயன்படுத்துவது இன்னுமொரு சிறப்பு.

வீட்டை அலங்கரிக்க நினைப்போர், தனிமையிலிருந்து தவிப்போர், வேளாண் மீது ஆர்வம் இருந்து நிலம் இல்லாமல் தவிப்போர் போன்றவர்களுக்கு இந்த வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டம் என்பது அவர்கள் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை கட்டாயம் கொடுக்கும்.

 

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.