கால்நடை மருத்துவத்துல வேம்பின் பயன்கள் ( Properties of Neem in Veterinary Medicine)

சினை பிடிக்காத மாடுகளுக்கு அரை கிலோ வேப்பம்பிண்ணாக்கு தண்ணீரில் ஊர வைத்து மறுநாள் வடிகட்டிய தண்ணீரை மாட்டுக்கு கொடுக்கணும். இதே மாதிரி 2-3 நாள் கொடுக்கலாம்.இப்பிடி கொடுத்தமுன்னா கருப்பையில் புண்ணு இருந்தாலும், நோய்த் தொற்று இருந்தாலும் சரியாயிடும். அதுக்குப் பிறகு சினை ஊசி போட்டமுன்னா சினை பிடிக்கும்.

ஆடு மாடுகளுக்கு கழிச்சல் இருந்தா வேப்ப கொழுந்து, மாதுள கொழுந்து ஒவ்வொண்ணையும் ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து சேர்த்து நல்லா அரச்சு கால்நடைகளுக்கு கொடுத்தமுன்னா கழிச்சல் நிக்கும்.

வேப்ப இலையை பொடி பண்ணி வெச்சுக்கிட்டு தினமும் 20கிராம் அளவுல கன்னுக்குட்டிகளுக்கு கொடுத்துக்கிட்டு வந்தமுன்னா கல்லீரல் பாதிப்பால் வரக்கூடிய பசியின்மை, சோர்வு, மற்றும் எடை குறைவு எல்லாம் குணமாகும். அதோட கல்லீரல் இயக்கமும் உடல் நலமும் சீரா இருக்கும்.

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்

தேவையான பொருட்கள்

  • சீரகம் – 15 கிராம்
  • கடுகு – 10 கிராம்
  • மிளகு – 5
  • மஞ்சள் தூள் – 65 கிராம்
  • பூண்டு – 5 பல்
  • தும்பை இலை – ஒரு கைப்பிடி
  • வேப்பிலை – ஒரு கைப்பிடி
  • வாழைத்தண்டு – 100 கிராம்
  • பாகற்காய் – 50 கிராம்
  • பனைவெல்லம் – 150 கிராம்

செய்முறை

சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும்.

மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.