விவசாய பெருமக்களே உஷார்!!!!!! ஊரடங்கு காலத்தில், சில இரசாயன மருந்தின் ஊக்கத்தினால்வெட்டுக்கிளியின் (துள்ளுகடான்) பெருக்கம் அதிகமாகிவிடும். மாற்று மருந்து தேட வழியில்லாத நிலையில் ஆயிரம், லட்சம் என படை எடுத்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தீர்வு தோட்டங்களில், வரப்புகளில் 20,30 மிளகாய் செடியின் கத்தைகளை (காய்ந்த மிளகாய் மார்) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.மிளகாய் மார்களில் காந்தல் தன்மை அதிகம் கொண்டது. [காடுகளின் தன்மைக்கேற்ப கத்தைகளை தயாராக வைத்திருக்கவும்] தங்கள்...

இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் எக்டரில் கரும்பு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் கரும்பு சாகுபடி மூலம் 190 இலட்சம் டன் கரும்புத்தோகை கிடைக்கிறது. இதில், 28.6% கரிமச்சத்தும், 0.35-0.15% மணிச்சத்தும், 0.50-0.42% சாம்பல் சத்தும் உள்ளன. இப்படிச் சத்துமிக்க கரும்புத் தோகையை நிலத்திலேயே விவசாயிகள் எரிக்கிறார்கள். மேலும், மண் போர்வையாகப் பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது. நுண்ணுயிர்கள் கரும்புத் தோகையை மட்கிய உரமாக மாற்றுவதன் மூலம் சுமார் ஒரு இலட்சம்...

விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்து நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன. தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் நன்மை தரும் பூச்சிகளும் அழிவதால் மகசூல் இழப்பு மட்டுமன்றி சுற்றுச்சூழல் கேடும் ஏற்படுகிறது. எனவே, நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகள் அறிந்து, அவற்றைப் பாதுகாப்பது அவசியம். மேலும் படிக்க: நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் முறை  நன்மை தரும் பூச்சிகளின்...

வணக்கம். நான் சமீபத்தில் கேள்விப்பட்டு என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஒரு மாநிலமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது தான். அது வேறு எந்த நாட்டிலும் அல்ல, நம் இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் தான். இதற்கான பின்புலங்களை ஆராயும் போது , ஒரு மிகப் பெரிய உண்மை கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட கடந்த 33 ஆண்டுகளாக முழுக்க முழுக்க இயற்கை...

கற்பூர கரைசல் ஒரு இயற்கை பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கி.  அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. தேவையான பொருட்கள் 100 ml வேப்பெண்ணை (neem oil). பசு மாட்டு கோமியம். புதியதாக இருந்தால் 1 லிட்டர், பழைய கோமியமாக இருந்தால் 1/2 (அரை) லிட்டர். பயிறுனுடைய வயதிற்கேற்ப கற்பூர வில்லைகள். உளுந்து போன்ற சிறிய இலைகள் உள்ள பயிர்களுக்கு, பயிர் ஒரு மாதத்திற்கு குறைவான...

கால்நடைகளின் உடல் வளர்ச்சி, கருத்தரிப்பு, பராமரிப்பு மற்றும் உற்பத்தி இவற்றில் தாது உப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. தாது உப்புகள் எனப்படும் அங்ககப் பொருட்கள் கால்நடைகளின் தீவனத்தில் குறைந்த அளவே தேவைப்படுபவை என்றாலும் இவை அறவே இல்லாவிட்டாலோ அல்லது அலவு குறைந்து காணப்பட்டாலோ உடலில் குறைப்பாட்டு அறிகுறிகள் உண்டாகும். இத்தகைய குறைபாடுகளைத் தக்க தருணத்தில் தாது உப்புகளைத் தீவனத்தில் சேர்ப்பதன் மூலம் நீக்கலாம். இக்குறைப்பாட்டினை விரைவில்...