கொரோனாவும் இயற்கை விவசாயமும்(Corona and Organic Farming)

வணக்கம். நான் சமீபத்தில் கேள்விப்பட்டு என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஒரு மாநிலமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது தான். அது வேறு எந்த நாட்டிலும் அல்ல, நம் இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் தான்.

இதற்கான பின்புலங்களை ஆராயும் போது , ஒரு மிகப் பெரிய உண்மை கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட கடந்த 33 ஆண்டுகளாக முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் மட்டுமே அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மாநில மக்கள் முழுமையாக இயற்கை விவசாயப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

உணவே மருந்து

உணவே மருந்து என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த உணவே பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், செயற்கை உரங்களாலும் விஷமாகிப்போன இக்காலகட்டத்தில், (உணவே விஷம் விஷமே உணவு) சிக்கிம் மாநில மக்களை அவர்கள் உண்ணும் உணவே மருந்தாகி கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக காப்பாற்றி இருக்கிறது என்பதே நாம் காணும் கண்கூடான உண்மை.

இயற்கை விவசாயம் என்பது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மரபணு மாற்றப்பட்ட கழிவுகளை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழிச்சி பசு உரம் மக்கிய குப்பை கால்நடை கழிவுகள் ஆகியவற்றை நிலத்தில் விலையும் பயிர்களுக்கு உரமாக பயன்படுத்துவது இயற்கை விவசாய முறைமையாகும்.

இயற்கை நமக்கு நிலம், நீர், காற்று ஆகியவற்றை இயற்கை விவசாயம் செய்வதற்கு வழங்குகிறது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து நமக்கு கிடைக்கின்றது. இன்று மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் சத்தான உணவுப் பொருள்களையும் இயற்கை முறையில் விளைவிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் கூறியது போல. எந்த நாட்டில் இயற்கை விவசாயம் தழைத்தோங்குகிறதோ, அந்த நாட்டில் மருத்துவமனைகள் தேவையற்றுப் போகும் என்ற கூற்று, இன்று சிக்கிம் மாநிலத்தில் நிஜமாகி  வருகிறது.

2046 ஆம் ஆண்டு வரை, அம்மாநிலத்தில் விளையும் இயற்கை விவசாயப் பொருட்களுக்கு, உலகச்சந்தையில் வணிக முன்ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்பது கூடுதலான ஆச்சர்ய தகவல். 

ஆரோக்கியமே சொத்து என்பதைத்தான் நமது முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். இதை நாம் அனைவரும் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.