You Are Browsing ‘இயற்கை உரங்கள்’ Category

இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் எக்டரில் கரும்பு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் கரும்பு சாகுபடி மூலம் 190 இலட்சம் டன் கரும்புத்தோகை கிடைக்கிறது. இதில், 28.6% கரிமச்சத்தும், 0.35-0.15% மணிச்சத்தும், 0.50-0.42% சாம்பல் சத்தும் உள்ளன. இப்படிச் சத்துமிக்க கரும்புத் தோகையை நிலத்திலேயே விவசாயிகள் எரிக்கிறார்கள். மேலும், மண் போர்வையாகப் பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது. நுண்ணுயிர்கள் கரும்புத் தோகையை மட்கிய உரமாக மாற்றுவதன் மூலம் சுமார் ஒரு இலட்சம்...

ஈ எம் 1 (EM 1) கரைசலை விவசாயிகளே தயார் செய்ய முடியும். தயார் செய்த கரைசலை மாதங்கள் வரை சேமித்து வைத்து கொள்ளலாம். தயாரித்த இரண்டு மாதத்திற்குள் உபயோகப்படுத்தும்பொழுது இதன் வீரியம் நன்றாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல இதன் வீரியம் குறைய தொடங்கும்.  தேவையான பொருள்கள் நன்கு கனிவான வாழைபழம் ஒரு கிலோ. பப்பாளி பழம் ஒருகிலோ. பரங்கி பழம் ஒருகிலோ. அச்சுவெல்லம் ஒருகிலோ. நாட்டு கோழி முட்டை ஒன்று. செய்முறை எல்லா பழங்களையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பிளாஸ்டிக்...

இயற்கை விவசாயத்தில் மிகமுக்கியமான இடுபொருட்களில் ஒன்று மீன் அமிலோ அமிலம். பயிர் வளர்வதற்கும்; பூக்கும் திறனை அதிகப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வளர்ச்சி ஊக்கிதான் மீன் அமினோ அமிலம். சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியான இது, மகசூல் அதிகரிப்புக்குப் பெரிதும் உதவி புரிகிறது. குறைந்த செலவில் மீன் கழிவுகளைக் கொண்டே இதை தயாரித்துவிட முடியும் என்பதால், இயற்கை விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்” ஆகும். மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை தேவைப்படும்...

குப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மாட்டோம். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்துலேயே வீசிட்டு வந்துடுவோம். குப்பை மறுசுழற்சி ‘மக்கும் குப்பை, மக்காத குப்பை இரண்டையும் பிரிச்சு குப்பைத் தொட்டியில போடுங்க’ என்று மாநகராட்சி எத்தனை முறை சொன்னாலும், அவையெல்லாம் வெறும் காதோடு போச்சு. காய்கறித் தோலையும் அழுகின தக்காளியையும் பத்திரமா பிளாஸ்டிக் கவர்ல போட்டுத்தான் குப்பைத் தொட்டியில போடுவோம்....

பஞ்சகவ்யா தயாரிப்பு முறை மற்றும் அதன் பயன்களை நாம் பஞ்சகவ்யா என்ற தலைப்பில் பார்த்தோம். பஞ்சகவ்யத்தில் உபயோகப்படுத்தும் பொருட்களின் பயன்கள் பற்றி இப்பொழுது பார்ப்போம். பஞ்சகவ்யத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பயிர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் மிகவும் பயன் தருவது பஞ்சகவ்யம்.  பஞ்சகவ்யத்தின் பயன்கள் பசுமாட்டு சாணம்: பாக்டீரியா, பூஞ்சாணம், நுண்ணுயிர் சத்துக்கள் பசுமாட்டு சிறுநீர்: பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து பால்:...

பஞ்சகவ்யத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?’ என்று டாக்டர் நடராஜனிடம் கேட்டோம். அவர் கூறியது, பஞ்சகவ்யத்தை ஆராய்ச்சி செய்ய, உயிரியில் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் பஞ்சகவ்யத்தில் கள் சேர்த்தும் சேர்க்காமலும் இரண்டு விதமாக பஞ்சகவ்யத்தைத் தயார் செய்து கொடுத்தார்கள். ஆராய்ச்சி செய்து பார்த்ததில் பஞ்சகவ்யத்தில் மிக மிக அதிகமாக நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிக ஆற்றலுடன் இருப்பதை கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள். குறிப்பு : பஞ்சகவ்யா...