மரச்செக்கு எண்ணெய் (Cold-Pressed Oils)

ஏன் மரச்செக்கு எண்ணெய் பயன்டுத்தவேண்டும்?

சமையல் எண்ணெய் ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல் பயன்பாட்டுத் தன்மையை இழக்கிறது. இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன் வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. மேலும் ரீபைன்ட் என்ற பெயரில் காஸ்டிக் சோடா போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன் இல்லாத புதுப்புது நோயெல்லாம் தோன்றக் காரணம் நமது உணவுப் பொருட்களே.

மரச்செக்கில் மாடுகளை கொண்டு எண்ணெய் ஆட்டும்போது செக்கில் சூடு ஏறுவதில்லை (மெதுவாக ஓட்டபடுவதால்) எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்காது. இந்த மரச்செக்கு எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும்.

சுத்திகரிக்கப்பட்டது என்ற பெயருடன் வரும் எண்ணைகள் எல்லாம், உண்மையில், மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே! இதனாலேயே, ‘செக்கு எண்ணெய் உபயோகியுங்கள்’ என்று சொல்லி வருகின்றனர். செக்கு எண்ணெய்க்கும், மரச்செக்கு எண்ணெய்க்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இரும்புச்செக்கில், 350 டிகிரி வெப்பத்தில் அரைத்து, தானியத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலை செய்து, ஒரு மோசமான திரவமாக பிழிந்து எடுப்பதை தான், செக்கு எண்ணெய் என்று கூறி, விற்கின்றனர். இது நம் உடல் நலத்திற்கு உதவாது.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும் போது, அதிகபட்சம், 35 டிகிரி வெப்பம் மட்டுமே இருக்கும். இதில், உயிர்ச்சத்துக்கள் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும், உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.

நல்லெண்ணெய்க்கு கருப்பட்டி

மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்ணெய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கையே. நல்லெண்ணெய் மட்டுமின்றி கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகின்றன. 

இப்படி மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுக்கவேண்டும். இந்த பித்தளை பாத்திரத்தின் உட்புறத்தில் ஈயம் பூசப்பட்டிருக்கும். இதை வைத்து தான் செக்கிலிருந்து வரும் எண்ணெயை எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி சேமிக்கவேண்டும். 

பயன்பாடு

மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும். ஆயினும் தற்காலத்தில் சுவட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் பாவனையில் உள்ளன.

அக்காலத்தில் ஆயுர்வேதம், சித்தமருத்துவம் போன்றவற்றில் செய்யப்பட்ட மருந்துகள் மரச்செக்கில் எடுக்கபட்டவையே. மக்களும் செக்கு கொண்டு எடுத்த எண்ணெயகலையே பயன்படுத்தினர்.

தரம்

இதில் முதல்தரமான எண்ணெய் மரச்செக்கில் மாடுகளை பயன்படுத்தி எடுக்கபடுவது.

இரண்டாம் தரம் மரச்செக்கில் மோட்டார்களை பயன்படுத்துவது.

மூன்றாவது இரும்பு உபகரணங்களை கொண்டு எடுக்கபடுவது.

ரீஃபைண்ட் ஆயில் vs மரச்செக்கு எண்ணெய்

# ரீஃபைண்ட் ஆயில் மரச்செக்கு எண்ணெய்
1 குறைந்த அளவே உயிர்சத்துக்கள் இருக்கும். உயிர்சத்துக்கள் நிறைந்து இருக்கும்.
2 சுமார் 250 டிகிரி வெப்பத்தில் உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலைசெய்துவிட்டு ஒரு மோசமான திரவமாக பிரித்து எடுப்பதுதான் இந்த ரீஃபைண்ட் எண்ணெய். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் ( room temperature ) மட்டுமே வரும் .இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.
3 நிறமற்றது. பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும்.
4 சுவையற்றது. ருசி சொல்லும் எந்த எண்ணெய் என்று.
5 அடர்த்தியற்றது. அடர்த்தி மிகுந்தது.
6 அடர்த்தியற்றது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) தேவை. அடர்த்தி மிகுந்தது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) போதும்.
7 பொறிப்பதற்கு ஏற்றது அல்ல. பொறிப்பதற்கு ஏற்றது.
8 ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
9 விலை மலிவானது. விலை சற்று அதிகம்.
Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.