இயற்கை தூய்மையாக்கி (Natural Cleaner)

இன்று நம் வீட்டில் உபையோகிக்கும் அனைத்து வகையான சுத்தம் செய்யும்(Cleaning) பொருட்கள் செயற்கை வேதியியல் (Chemical) பொருட்களால் ஆனது. இதை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதால் அது நமக்கு மட்டுமல்லாமல், நம் சுற்றுபுற சூழ்நிலைக்கும் சீர்கேடு விளைவிக்கிறது. இவ்வாறு சுத்திகரிப்பு செய்யாமல் செல்லும் தண்ணீரானது நம் நீர் ஆதார  நிலைகளைளான ஏரி, குளங்கள், ஆறுகள் மற்றும்  நிலத்தடி நீரையும் நச்சுதம்மையடையதாக மாற்றுகிறது. நம்மில் பல பேர் பல நேரங்களில் இவற்றிர்க்கு மாற்று இல்லையா என ஏங்கியதுண்டு. அதற்க்கான மிக எளிய மாற்று தீர்வைதான் நாம் இங்கு பார்க்கபோகிறோம். இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல, இது நம் முன்னோர்கலால் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்து வந்த ஒன்று.

தேவையான பொருட்கள் (1:3:10)

 1. நாட்டு சர்க்கரை – 1 பங்கு
 2. எலுமிச்சை பழத் தோல் (அ) கொழுமிச்சை பழத் தோல் (அ)  ஆரஞ்சு பழத் தோல் – 3 பங்கு
 3. தண்ணீர் – 10 பங்கு
 4. இரண்டு (அ) மூன்று முழு எலுமிச்சை பழங்கள்.
 5. ஈஸ்ட்(Yeast) – 1 டீ ஸ்பூன்

செய்முறை

 • முதலில் அளவிட தேவையான கிண்ணம் (அ) கோப்பை  (அ) குவளையை எடுத்துகொள்ள வேண்டும், மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் இதில் மட்டும் அளவிடவேண்டும்.
 • உங்களுக்கு தேவையான அளவு 1 லிட்டர், 2 லிட்டர் சேமிப்பு பாத்திரத்தை எடுத்து கொள்ளவேண்டும். பிலாஸ்டிக் பாட்டில் ( un-used soft drinks plastic bottle).
 • இப்போது 10 பங்கு  தண்ணீரை முதலில் கோப்பையில் அளந்து பாட்டிலில் ஊற்றவும்.
 • அடுத்து 1 பங்கு நாட்டு சர்கரையை கோப்பையில் அளந்து பாட்டிலில் ஊற்றவும்.
 • பின்னர் 3 பங்கு பழத்தோல்களை சிறு சிறு  துண்டுகளாக நருக்கி கோப்பையில் அளந்து பாட்டிலில் சேர்க்கவும். அனைத்து பழத் தோல்களையும் கலந்தும் கூட போடலாம்.
 • இப்போது இரண்டு (அ) மூன்று முழு எலுமிச்சை பழங்களை 2, 3 துண்டாகளாக நருக்கி போடவும்.
 • இறுதியாக 1 டீ ஸ்பூன்(Spoon) ஈஸ்ட்(Yeast) சேர்க்கவும், ஈஸ்ட்(Yeast) சேர்ப்பதனால் கரைசல் 15 நாட்களில் தாயாராகிவிடும். இல்லையென்றால் 3 மாதங்கள் ஆகும். ஈஸ்ட்(Yeast), கரைசலை விரைவாக நொதிக்க உதவுகிறது மற்றும் ஈஸ்ட்(Yeast) செயற்கையான  ஒன்று இதுவும் இயற்கையானதாக வேண்டுமென்றால் 3 மாதங்கள் காத்திருக்கலாம்.
 • இப்போது சேமிப்பு பாத்திரத்தின் மூடியை இறுக்கமாக மூடி விடவும், தினமும் இந்த மூடியை காலை, மாலை திறந்து மூடவும். ஏனென்றால் சேமிப்பு பாத்திரத்தினில் ஒரு வாயு(Gas) உருவாகி சேமிப்பு பாத்திரத்தை வெடிக்க செய்து விடும்.
 • இறுதியாக வாயு வெளியேற்றிய பின்னர் கரைசலை இறுக்கமாக மூடி நன்றாக குலுக்கிவிடவும்.

எவ்வாறு பயன்படுத்துவது

 • ஈஸ்ட்  கலந்த கரைசலை 15 நாட்கள்  (அ)  ஈஸ்ட்  கலக்காததை 3 மாதங்கள் கழித்து வடிகட்டி சேமித்து வைத்துகொள்ளவேண்டும்.
 • இந்த கரைசலை தண்ணீர் கலக்காமல் அப்படியே பயன்படுத்தலாம், இல்லையென்றால் உங்கள் தேவைக்கேற்ப்ப தண்ணீர் கலந்தும் பயன்படுத்தலாம்.
 • இந்த கரைசலில் துளிக்கூட நுரை வராது, நம் அன்னையர்க்கு நுரை வராவில்லையென்றால் சுத்தம் செய்த திருப்த்தி வராது ஆகையால் கரைசலுடன் சிறிது சலவைக்கட்டித் தூள்(Kaadi Soap Powder), சேர்த்து கொள்ளவேண்டும்.

எப்படி பயன்படுத்துவது

 • ஈஸ்ட்  கலந்த கரைசலை 15 நாட்கள் கழித்து எடுத்த கரைசலை நாம் பாத்திரம் மற்றும் தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இவ்வாறு தரையை சுத்தம் செய்தால் எறும்பு, கரப்பான் பூச்சி கூட வராது.
 • தரையை சுத்தம் செய்ய ஒரு பக்கெட் தண்ணீருக்கு 30 மி.லி கரைசல் சேர்த்தால் போதும்.
 • ஈஸ்ட்  கலந்த கரைசலை 30 நாட்கள் கழித்து எடுத்த நம் குழியல் அறையை மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
 • இந்த கரைசலை நாம் துணி சுத்தம் செய்யக்கூட பயன்படுத்தலாம், ஒரு பக்கெட் தண்ணீருக்கு 50 மி.லி கரைசல் சேர்த்தால் போதும்.
 • இந்த கரைசலில் துளிக்கூட நச்சு தன்மையில்லை, நம் நீர் நிலைகளுக்கும் எந்த தீங்கும் ஏற்படுத்தாது.

இந்த இயற்கை முறையினை பயன்படுத்துவோம், செயற்கை வேதியல் முறையினை தவிர்ப்போம்.
இது உங்களுக்கு பயன்யுள்ளதாக தகவலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

2 Comments so far. Feel free to join this conversation.

 1. Mani June 16, 2015 at 8:13 pm -

  Very Nice post, and useful one

  • Arulkumar February 12, 2016 at 10:34 pm -

   Thanks for your valuable feedback.

Leave A Response

You must be logged in to post a comment.