சர்கரைத்துளசி(Sugar Leaf)

 • மூலிகையின் பெயர்: சர்கரைத்துளசி
 • தாவரப்பெயர்: STEVIA REBAUDIANA
 • தாவரக்குடும்பம்: Asteraceae
 • பயன்தரும் பாகங்கள்: இலை மற்றும் தண்டு.
 • வேறு பெயர்கள்: candyleaf, sweetleaf or sugarleaf.

வளரியல்பு : சர்கரைத்துளசியின் பிறப்பிடம் தென் அமரிக்கா. அங்கு இயற்கை விஞ்ஞானியான ANTONIO BERRONI என்பவர் 1887ல் இந்த சர்கரைத்துளசியைக் கண்டுபிடித்தார். பாராகுவே மற்றும் பிரேசில் அதிகமாக வளர்க்கப்பட்டது. பின் வட அமரிக்கா, தென் கலிப்போர்னியா மற்றும் மெக்சிகோவில் அதிகம் வளர்க்கப்பட்டது. பின் ஜப்பானில் கோடைகாலத்தில் 32F-35F சீதோஸ்ணத்தில் வளர்க்கப்பட்டது. பின் எல்லா நாட்டிற்கும் பறவிற்று.

பண்புகள்

Stevia

 • சர்க்கரைத்தளசி 2 அடி முதல் 3 அடி உயரம் வரை வளரக்கூடியது.
 • இலைகள் இனிப்பாக இருக்கும். கலோரி கிடையாது. உலர்ந்த இலைகளைப் பொடியாகச் செய்தால் இனிப்பு அதிகமாக இருக்கும்.
 • பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் விதைகள் உண்டாகும்.
 • இதை விதை மூலமும் கட்டிங் மூலமும் இனப் பெருக்கம் செய்யப்பட்டது. முதிர்ந்த விதைகள் கருப்பாக மரக்கலரில் இருக்கும். இதன் முளைப்புத் திறன் மிகவும் குறைவு.
 • இது மணல் கலந்த களிமண்ணில் நன்கு வளரக்கூடியது.
 • இதன் ஆணிவேர் நன்கு ஆளமாகச் செல்லும்.
 • இலைகள் அதிகறிக்க நட்ட 3-4 வாரங்கழித்து கொழுந்துகளைக் கிள்ளி விட்டால் பக்கக் கிளைகள் அதிகறித்து இலைகள் அதிகமாக விடும்.

பயிரிடும் முறை

Planting Stevia

 • மண் பாதுகாப்பில் இதற்கு இயற்கை உரம், மக்கிய தொழு உரம் தான் இட வேண்டும். இராசாயன உரம் இடக்கூடாது.
 • வியாபார நோக்குடன் பயிரிட நிலத்தை நன்கு உழுது தொழு உரம் இட்டு 3-4 அடி அகல மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.
 • உயரம் 4 அங்குலம் முதல் 6 அங்குல உயர்த்த வேண்டும். பின் 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை இடைவெளி விட்டு நாற்றுக் களை நட வேண்டும், பின் தண்ணீர் விடவேண்டும்.
 • ஈரப்பதம் தொடர்ந்து இருக்க 3 அங்குலம் முதல் 6 அங்குல மூடாக்கு அமைக்க வேண்டும்.
 • பின் 2 வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும்.
 • செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் போது இலைகளைப் பறிப்பது சாலச் சிறந்தது.
 • இலைகளை வெய்யிலில் 8 மணி நேரம் உலர வைத்து எடுத்துப் பதுகாக்க வேண்டும்.
 • முதிர்ந்த இலைகளைப் பொடியாக அரைத்து எடுத்து கண்ணாடி குடுவைகளில் பாதுகாப்பார்கள்.

மருத்துவப் பயன்கள்

Stevia

 • சர்க்கரைத்துளசியின் இலைகள், தண்டுகள் சர்க்கரை போன்று இனிப்பாக இருக்கும்.
 • இதில் கலோரீஸ் எதுவும் கிடையாது. அதனால் இதை சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த இதை அதிகமாகப் பயன்படுத்திகிறார்கள்.
 • இதிலிருந்து மாத்திரைகள் செய்கிரார்கள், எண்ணெய் எடுக்கிறார்கள் பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன் படுத்துகிராகள்.
 • இதன் பொடியை காபி, டீ மற்றும் சோடாக்களில் பயன்படுத்திகிறார்கள்.
 • இந்த இலை இனிப்பில் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன.
 • இது ‘பிளட் சுகர்,’ இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும்.
 • இதையையே ஜப்பானில் வயிற்று உப்பல், பல் வியாதிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
 • இது ‘ஆன்டி பாக்டீரீயாவாக’ பயன்படுகிறது. இது சர்கரைக்கு மாற்றாக உள்ள ஒரு நல்ல மூலிகையாகும்.
Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.