தினம் ஒரு குறள்

  • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு
பொருள் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
  • உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.
பொருள் : பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
  • இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு (சான்றாண்மை; 987)
பொருள் : தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யாவிட்டால் ஒருவர் கொண்ட சான்றாமையினால் பயன்தான் என்ன?

 

Print Friendly, PDF & Email